மட்டக்களப்பு -கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு


– பழுலுல்லாஹ் பர்ஹான் –

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை தற்போது அதிகரித்து காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகள் தற்போது கூட்டாக அழைந்து திரிவதாகவும் இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்து இடம்பெறுவதற்கு காரணமாக அமைவதாகவும் இவ் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த வீதியில் பயணம் செய்யும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

This slideshow requires JavaScript.