மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்


மாலத்தீவில் நேற்று முதல் எதர்வரும் 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி இன்று மதியம் 12 மணி முதல் ஒரு மாதகால அவசர நிலையை அந்த நாடு பிரகடனம் செய்துள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான பெரும் ஊர்வலம் ஒன்றை எதிர்க்கட்சி நடத்த திட்டமிட்டிருந்த தினத்துக்கு இரு நாட்களுக்கு முன்னதாக அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஜனாதிபதி மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது.

ஜனாதிபதி மாளிகை அருகிலேயே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது

Advertisements