விசப்பாம்மைப் கடித்துக்கொன்ற ஒன்றரை வயது சிறுவன்


பிரேசில் நாட்டில் ஒன்றரை வயது சிறுவன் விளையாட்டுப் பொருளென நினைத்து விசப்பாம்பைக் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலின் மாஸ்டர்தாஸ் நகரில் வசித்து வரும் ஜெயின் ஃபெரேரியா, லூசியர் டிசோஸா தம்பதியரின் ஒன்றரை வயது மகன் லோரென்சோ.

குழந்தையை வீட்டருகில் விளையாட விட்டுவிட்டு அவனுக்கு பால் தயாரித்துக் கொண்டிருந்துள்ளார் டிசோஸா.

திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனின் கை, வாய்ப் பகுதியில் இரத்தம் இருந்ததையும் அருகில் பாம்பு ஒன்று இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாம்பை பாட்டில் ஒன்றில் அடைத்து எடுத்துக்கொண்டு குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அவர்.

மருத்துவமனையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

விளையாட்டுப் பொருள் என நினைத்து சிறுவன் பாம்பின் கழுத்தைப் பிடித்துக் கடித்துள்ளான். அது ஒரு ஜராரக்கா எனும் கொடிய வகை விசப்பாம்பு என அடையாளங்காணப்பட்டுள்ளது.

பொதுவாக, இத்தகைய பாம்பு கடித்தால், உடனே மருத்துவ சிகிச்சை செய்யாவிட்டால் இரத்தக் கசிவு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட அபாயகரமான அறிகுறிகளுடன் உடல் நலக் கோளாறு ஏற்படும். ஆனால், இச்சிறுவன் அந்த பாம்பை கடித்துக் கொன்று அதிர்ஷ்டவசமாக உடல் நலத்துடன் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

20151103-opipp

snake