வீதிகளை சுத்தம் செய்து வறுமையில் வாழ்ந்து வந்த யுவதி அழகுராணியாக தெரிவானார்


வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை நடாத்திச் சென்ற யுவதி ஒருவர் அழகுராணியான சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி வீதிகளை சுத்தம் செய்து வரும் வறிய குடும்பத்தில் பிறந்து மிகவும் கடினமான வாழ்கையை வாழ்ந்து வந்ததுடன்,யுவதியும் வீதிகளை சுத்தம் செய்து அதில் கிடைக்கும் பணத்திலேயே வாழ்வை நடத்தி சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த யுவதி தாய்லாந்தில் நடைபெற்ற பிரபலமான அழகுராணி போட்டியில் கலந்து கொண்டு அதில் அவர் முதலிடத்தை பெற்று அழகுராணியாக தெரிவானார்.

அழகுராணியாக தெரிவான குறித்த யுவதி மிகவும் சிறிய வசதிவாய்ப்பற்ற வீட்டில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.