ஆரோக்கியத்தைப் பேண தாடி, மீசை வளருங்கள்


அவுஸ்­தி­ரே­லிய மருத்­துவ ஆய்வு

தாடி, மீசை வளர்ப்­பது ஆண்­களின் ஆரோக்­கி­யத்­துக்கு மிகவும் நல்­லது என அவுஸ்­தி­ரே­லிய ஆய்­வொன்று கூறு­கி­றது.

தாடி, மீசை வளர்ப்­பது சூரி­ய­னி­லி­ருந்து வெளிப்­படும் தீங்கு விளை­விக்கக் கூடிய புற ஊதா கதிர்­க­ளி­லி­ருந்து ஒரு­வ­ரது முகத்தைப் பாது­காத்து அவர் ஆரோக்­கி­யத்­துடன் திகழ வழி­வகை செய்­வ­தாக தென் குயீன்ஸ்­லாந்து பல்­க­லைக்­க­ழ­கத்தால் வெளி­யி­டப்­பட்ட கதிர்­வீச்சு பாது­காப்பு தொடர்­பான ரேடி­யேஷன் புரொ­டக்ஸன் டொஸி­மெட்றி ஆய்­வேடு கூறு­கி­றது.

கதிர்­வீச்சு தொடர்­பான ஆய்வை மேற்­கொண்ட ஆய்­வா­ளர்கள், முகத்தில் தாடி, மீசை இல்­லாத பகு­தி­களை விட தாடி மீசை உள்ள பகு­திகள் புற ஊதா கதிர்­வீச்சால் குறைந்­த­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளமையை கண்­ட­றி­ந்துள்ளனர்.

மேற்­படி ஆய்­வா­னது 1.5 அங்­கு­லத்­தி­லி­ருந்து 3.5 அங்­குல நீள­மு­டைய தாடி, மீசையைக் கொண்­ட­வர்கள் மத்­தியில் நடத்­தப்­பட்­டது.

தாடி, மீசையின் நீளத்தைப் பொறுத்து அவை சூரிய கதிர்­வீச்­சி­லி­ருந்து முகத்தை 90 சத­வீ­தத்­தி­லி­ருந்து 95 சத­வீதம் பாது­காப்­ப­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­ றனர்.

இதனால் கதிர்­வீச்சால் ஏற்­ப­டக்­கூடிய சரும பாதிப்பு தடுக்­கப்­பட்டு முகம் இள மைத் தோற்­றத்­துடன் சுருக்­கங்­க­ளின்றி பேணப்­ப­டு­வ­தாக அவர்கள் கூறு­கின்­றனர்.

ஒரு­வ­ரது முகத்­திலும் ஏனைய சூரிய ஒளி படும் உடல் பாகங்­க­ளிலும் காணப்­படும் முடிகள் சூரிய கதிர்­வீச்­சி­லி­ருந்து பாது­காப்பைத் தரு­வ­தாக லண்­டனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் மருத்­துவ நிபு­ண­ரான நிக் லொவி தெரி­வித்தார்.

நேர்கோட்டில் பய­ணிக்கும் கதிர்­வீச்சை காவும் ஒளி அலைகள், அடர்ந்த முடிகள் மீது தொடு­கை­யு­று­கையில் விலகல் அடை­வதால் அவை தோலைப் பாதிப்­பது தடுக்­கப்­ப­டு­வ­தாக இந்த ஆய்வில் பங்­கேற்ற லெயன் சாலிஸ் தெரி­வித்தார்.

இவ்­வாறு தாடி, மீசை வளர்ப்­பது சூரிய கதிர்­வீச்சால் தோல் புற்­றுநோய் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தையும் தடுப்­ப­தாக ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

மேலும் ஒருவர் வளர்த்­துள்ள தாடி, மீசை அவ­ருக்கு ஒவ்­வாமை ஏற்­ப­டுத்தக் கூடிய தூசு துணிக்­கைகள் அவ­ரது நாசித் துவா­ரத்­தி­னூடாக அவ­ரது நுரை­யி­ரலை சென்­ற­டை­வதைத் தடுத்­து, அவ­ருக்கு ஆஸ்­துமா நோய் ஏற்­ப­டாமல் தடுப்­ப­தாக அந்த ஆய்வில் பங்கேற்ற மருத்துவ நிபுணரான ரொப் ஹிக்ஸ் தெரிவித்தார். அத் துடன் ஒருவரது தாடி, மீசையானது தோலின் ஆரோக் கியத்தைப் பாது காத்து அவர் மிகவும் இளமை யுடன் திகழ வழி வகை செய்வதா கவும் மருத்துவ நிபுணர் நிக் லொவி கூறினார்.