இந்த தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்தால் அழகிய காதலி கிடைப்பார்!


ஐரோப்பிய கண்டத்தின் ஏதோவொரு நாட்டில் வசித்துவரும் ஒரு பெண் இந்த நவீன யுகத்தில், தனக்கேற்ற துணையை தேடும் முயற்சியில் சாலையோர மரமொன்றில் ஒரு அறிவிப்பை வைத்துள்ளார்.
இவர் தனது அறிவிப்பில் ஒரு கணிதத்தின் மூலமாக தனது மொபைல் நம்பரை குறிப்பிட்டுள்ளார். இந்தக் கணக்குக்கு சரியான தீர்வைக் கண்டுபிடித்து தனது மொபைல் எண்ணைக் கண்டறியும் அதிபுத்திசாலியிடம் பேச ஆவலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்புப் பலகை, நேற்று டுவிட்டர் பயனாளர் ஒருவரின் கண்ணில்பட்டது. பிறகென்ன, அந்தப் பெண்ணின் மொபைல் எண்ணை அறிவதற்கு பல கணிதவியலாளர்களும் தற்போது தீவிரமாக போராடி வருகின்றனர்.