உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களிலேயே அதிகமாக ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றன


உள்­ளூ­ராட்சி மன்ற நிறு­வ­னங்­க­ளி­லேயே அதி­க­மாக ஊழல் மற்றும் மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன. முதலில் உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­க­ளில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்­காக ஊட­கங்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் நிலவும் ஊழல் மோச­டி­களைக் குறைப்­பது தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் மாகாண சபை­களின் ஆணை­யா­ளர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரிகள் மற்றும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லுக்கு தலைமை வகித்து உரையாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடந்து கூறு­கையில்,

பொது­மக்கள் ஒரு வீட்­டினை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான அனு­ம­தியைப் பெற்றுக் கொள்­வது உட்­பட பல்­வேறு அனு­மதிப் பத்­தி­ரங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளையே நாட­வேண்­டி­யுள்­ளது. இதற்­காக அவர்கள் இலட்­சக்­க­ணக்கில் இலஞ்சம் வழங்­க­வேண்­டி­யுள்­ளது. இல்­லா­விட்டால் அவர்கள் இதற்­காக பல ­வ­ரு­டங்கள் கூட காத்துக் கிடக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

இவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கே அமைச்சில் விசேட பிரி­வொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பி­ரிவு சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்கு அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பும் தேவை. குறிப்­பாக ஊட­கங்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாகும்.

பொதுமக்கள் தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­பப்­ப­டி­வங்கள் கூட கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாது வரு­டக்­க­ணக்கில் தேங்­கிக்­கி­டக்­கின்­றன.

இதனைத் தவிர்ப்­ப­தற்­காக வீட்டு நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் போன்­றன விண்­ணப்­பிக்­கப்­பட்டு குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் வழங்­கப்­பட வேண்­டு­மென அமைச்சு சுற்று நிரு­பங்கள் மூலம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கோர­வுள்­ளன. அத்­துடன் அமைச்சு அதற்­கான கொள்கைத் திட்­டங்­களை வகுக்­க­வுள்­ளது.

மேலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்கள் பலர் இன்று ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளாக மாறி­யுள்­ளனர். இதனால் மக்­க­ளுக்கு எதிர்­பார்க்கும் சேவைகள் கிட்­டு­வ­தில்லை. ஒரு கோவையை மற்றோர் அதி­கா­ரிக்கு கொண்டு சென்று கொடுப்­ப­தற்கு கூட இலஞ்சம் வழங்க வேண்­டி­யுள்­ளது. இன்று சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள் பாதை­க­ளிலும் மற்றும் இடங்­க­ளிலும் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்குக் காரணம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் நிலவும் மோசடிகளாகும்.

எனவே இவற்றைத்தடுத்து உள்ளூராட்சி மன்றங்களில் நல்லாட்சியையும் சிறந்த, நேர்மையான பணிகளையும் உறுதிசெய்வ தற்கும் இலஞ்சம் வழங்காமலிருப்பதற் கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது தொடர்பாக பல செயற்றிட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றார்.