கடலோரப் பகுதி அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் ஆக்கிரமிப்பு


சம்பிரதாய பாதுகாப்பு நடைமுறைக்கு அப்பாற் சென்று இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி தெரிவித்துள்ளார்.
இதன்படி அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அவர், புத்தளம் முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடலோர பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் சந்தர்ப்பங்களில், அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் போது, இவ்வாறான விடயங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்த விரிவான திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்ச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisements