கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததில் பாரிய மோசடி


ஹம்பாந்தோட்டை துறைமுக கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் பாரியளவிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இந்த மோசடிகளால் 19.9 மில்லியன் டொலர்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் எரிபொருள் களஞ்சியத்தை பார்வையிடச் சென்ற அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.