செவ்வாய்க்கு அனுப்ப ஆட்களைத் தேடுகிறது நாசா!


செவ்வாய் கிரகம் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள விண்வெளி வீரர்களை நாசா தேடி வருகிறது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இதற்காக அமெரிக்க குடியுரிமை பெற்ற விமானிகள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடமிருந்தும் விண்ணப்பங்களை எதிர்பார்த்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.

விண்வெளிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் குறித்த விபரங்கள் 2017 ஆம் ஆண்டு மத்தியில் அறிவிக்கப்படும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அவர்களது பணிக்காலத்தில் நான்கு முறை அமெரிக்க விண்வெளி ஓடங்களில் விண்வெளிக்கு அனுப்பப்படுவர்.

விண்வெளிக்கு அனுப்புவதற்காக இதுவரை 300 பேரை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.

நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, பொறியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய ஏதாவது ஒன்றில் குறைந்தபட்சம் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.