மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி


கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை (12) ஶ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள பாராளுமன்ற விளையாட்டரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியை இடம்பெறவுள்ள 12 ஆம் திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கோட்டை நாகவிகாரையில், கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமக்ஶ்ரீ தர்ம மகா சங்கத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரரின் தலைமையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Advertisements

One comment