மாதுலுவாவே சோபித தேரர் இயற்கை எய்தினார்


கோட்டை நாக விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய மாதுலுவாவே சோபித தேரர் இன்று (08) அதிகாலை இயற்கை எய்தினார்.

சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அன்னார் காலமானார்.

73 வயதில் காலமடைந்துள்ள மாதுலுவாவே சோபித தேரர் சிறந்த ஆன்மீக தலைவராக செயற்பட்டுள்ளதுடன் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்காக உயரிய தலைமைத்துவத்தை நல்கியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பௌத்த தர்மத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட மாதுலுவாவே சோபித தேரர் இனங்களிடையே சக வாழ்வினையும் ஒற்றுமையும் கட்டியெழுப்புவதற்காக திறன்மிகு செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisements