மார்க் சக்கபேர்க்கை பேஸ்புக்கில் block செய்ய முடியாது


கசப்பான அனுபவத்தால், நீங்கள் மீண்டும் நேரில் சந்திக்க விரும்பாத நபரை தடுக்க வழியே இல்லை என்றாலும், பேஸ்புக்கில் நிச்சயமாக அவரை block (முடக்க) செய்துவிடலாம்.

ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை (mark Zuckerberg) என்ன முயற்சித்தாலும் ‘ப்ளாக்’ செய்ய முடியாது.

இதற்கான காரணம் மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார்.

தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விபரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார்.

கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத் என்பவர் பேஸ்புக் நிறுவனர் மார்க்கை ப்ளாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய இந்த ஆச்சரியமளிக்கும் அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நீங்கள் எத்தனைமுறை அவரை பேஸ்புக்கில் முடக்க முயற்சித்தாலும், ‘தற்போதைக்கு பிளாக் செய்ய முடியாது’ என்றே பேஸ்புக் பதில்தரும். முயற்சித்து பாருங்கள்

Advertisements