முகநூல் ஊடாக முன்னாள் அரசியல்வாதி ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்


முகநூல் ஊடாக ஊடகவியலாளர் ஒருவரை மோசமான வார்த்தைகளால் அவதூறு செய்தும் அச்சுறுத்தலும் செய்த முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக இணைய குற்றப்பிரிவு ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் பிரமுகர் மலையகத்தின் முன்னாள் நகர சபை தலைவராக கடமையாற்றியவர் என்பது முக்கிய விடயம்.

குறித்த ஊடகவியலாளர் இவரைப்பற்றிய செய்திகளை பத்திரிகையில் எழுதி வருவதாக குறித்த அரசியல் பிரமுகர் ஊடகவியலாளரின் முகநூல் உள்பெட்டியினுள் தகாத வார்த்தைகளால் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு நாகரிகமான முறையில் ஊடகவியலாளர் பதில் கூறியும் மறுபடி குறித்த அரசியல் பிரமுகர் அச்சுறுத்தும் வகையில் பதில் பதிவேற்றியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இவ்வாறு இடம்பெறும் சம்பவங்களை சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை விசாரிக்கும் பிரிவினருக்கு முறைப்பாடு செய்ய வேண்டும் என்பதால் அதன் மூலம் முறைப்பாடு செய்து குறித்த அரசியல் பிரமுகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஊடகவியலாளர் தனது நிறுவன சட்டதரணிகளின் ஆலோசனையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முகநூல் வழியாக பெறப்பட்ட ஆதாரங்கள் சைபர் கிரைம் பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளன.

Advertisements