விமானியின் சாமர்த்தியத்தால் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய விமானம்


லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிய தகவல் வெளியாகி உள்ளது. சுமார் ஆயிரம் அடி தொலைவில் ராக்கெட் வருவதைக் கவனித்த விமானி, உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியுள்ளது. ஆனால், இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எகிப்தில் ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 224 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன் இங்கிலாந்து ஜெட் விமானம் குறித்த இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனை ரேடார் கண்காணிப்பு மையம் கண்டறிந்துள்ளது. கடந்த ஆகஸ்டு 23ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை போக்குவரத்து துறையும் உறுதி செய்துள்ளது.

இது குறித்து வெளியான தகவலில், முதன்மை அதிகாரியே அந்த நேரத்தில் பொறுப்புக்குரியவர். ஆனால் விமானி அறையில் விமானி இருந்துள்ளார். ராக்கெட் விமானத்தை நோக்கி வந்ததை பார்த்துள்ளார். ராக்கெட்டிடம் இருந்து தப்புவதற்கு விமானத்தை இடதுபுறம் திருப்ப அவர் உத்தரவிட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.

விமான அறையில் இருந்த 5 ஊழியர்களுக்கும் விமானம் தரை இறங்கிய பின்பே இந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளது. அதன்பின் அன்றிரவு எகிப்திலேயே தங்குவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் அவர்கள் இங்கிலாந்திற்கு திரும்ப செல்லும் முடிவையே தேர்ந்தெடுத்தனர். இந்த ராக்கெட்டை ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி மற்றொரு பயணிகள் விமானமும் கண்டுள்ளது.

எகிப்தின் இராணுவ பயிற்சியில் ஒன்றாக இந்த ராக்கெட் வந்துள்ளது என சம்பவத்திற்கு பின் விமானிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அரசாங்க உத்தரவின்படி, ஷார்ம் எல் ஷேக் நகரில் தவித்து நிற்கும் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து நாட்டினர் சிறப்பு சார்ட்டர்டு விமானத்தில் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பத் தொடங்கி உள்ளனர்.