500 மில்லியன் கோரிய விஜயதாஸவிடம் 5000 மில்லியன் கோரும் பொன்சேகா


நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் இருந்து 5000 மில்லியன் ரூபாய் நஸ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளதாக ஜனநாயக கட்சியின் தலைவர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மினுவான்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விஜயதாஸ ராஜபக்ஷ அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தன்னை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டுள்ளதாக பொன்சேகா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை முன்னதாக 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரி பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக விஜதாஸ ராஜபக்ஷ கூறியமை குறிப்பிடத்தக்கது.

எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர் ஒரு திருடன் என்றும் சரத் பொன்சேகா அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்டார்.

இதானால் தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தனது சட்டத்தரணிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அதற்கு மறுதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisements