குறிபார்த்துச் சுடும் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் என்.எம்.நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை


– எம்.வை.அமீர் –

 இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனம்கல்வியமைச்சுடன் இணைந்து அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான

குறிபார்த்துச் சுடும் போட்டியில் வரலாற்றில் முதற்தடவையாக போட்டியிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் என்.எம்.நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் அவர்களின் மேற்பார்வையில் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் லெப்டினன் கே.எம்.தமீம் அவர்களின் வழிகாட்டலிலும் பயிற்சியினாலும் இம் மாணவன் இச் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

கல்லூரியில் கடந்த இருவாரத்திற்கு முன்புதான் குறிபார்த்துச் சுடும் கழகம்ஆரம்பிக்கப்பட்டது. இதில் 11 மாணவர்கள் முதன் முதலில் அங்கத்தவர்களாகஇணைந்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இம் மாணவர்கள் போட்டிக்கு சென்றிருந்த போதுஇம்மாணவர்கள் மத்தியில் மறைந்து கிடந்த திறமைகள் வெளிக்காட்டப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்தும்  நூற்றுக்கும் அதிகமான சிங்கள , தமிழ் , முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி போட்டியில்கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருமே மிகவும் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும் ஒரேயொரு மாணவர் மட்டுமே வெற்றி பெற முடிந்தததாகவும் ஏனைய மாணவர்கள் குறைந்த புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்திருந்தாலும் எதிர்வரும் காலங்களில் நிச்சயம் வெற்றிபெற்று கல்முனை பிரதேசத்திற்கும் இக் கல்லூரிக்கும் நல்ல பெயரையும் புகழையும் ஈட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கையிருப்பதாக உடற்கல்வி ஆசிரியரும் இக்கழகத்திற்கு பொறுப்பான ஆசிரியருமான  லெப்டினன் கே.எம்.தமீம் தெரிவித்தார்.

இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனத்தின்தொழில்நுட்ப அதிகாரி கெப்டன் எச்.எஸ்.வீரசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

This slideshow requires JavaScript.