மீலாதுன்னபி-2015 போட்டி நிகழ்ச்சியில்,சம்மாந்துறை சகீப் அத்னான் கிழக்குமாகாண மட்டத்தில் முதலிடம் தேசிய மட்டத்துக்கும் தெரிவு


– எம்.வை.அமீர் –

அண்மையில் இடம்பெற்ற மாகாண மட்ட மீலாதுன்னபி-2015  போட்டி நிகழ்ச்சியில் ஆரம்ப பிரிவு ஆண்களுக்கான பேச்சுப்போட்டியில் கிழக்குமாகாணத்தில், முதலாமிடத்தினை சம்மாந்துறை தாறுல் உலும் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் முஹம்மட் மாஹிர் சகீப் அத்னான் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அகில இலங்கை ரீதியான போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தாறுல் உலும் வித்தியாலயம், 1890ம் ஆண்டு சம்மாந்துறையின் முதலாவது ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இப்பாடசாலையிலிருந்து மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தேசிய மட்ட போட்டி ஒன்றுக்கு பங்குபற்றவுள்ளவர் என்ற பெருமையையும் சகீப் அத்னான் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

தரம் 5 ல் கல்வி கற்கும் சகீப் அத்னான், தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் ஏஆர்.எம்.மாஹீர், ஆசிரியை ஜெஸ்மின் சிஹானா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வருமாவார். இவர் அண்மையில் நடைபெற்ற 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் 180 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.