முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் கலாநிதி ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமனம்


– எம்.வை.அமீர் –

கிழக்குமாகாணசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பு முன்னாள் குழுக்களின் தலைவரும் உறுப்பினரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ஜெமீல், கடந்த பாராளமன்ற தேர்தலின்போது நாடுமுழுவதும் சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்களைக் கவர்வதில் மிகுந்த பங்காற்றியிருந்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களிடமுள்ள அமைச்சில் மிக உயர்ந்த இப்பதவியை அமைச்சர் றிசாத், ஜெமீலுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.