இலங்கை ஸ்னைப்பர் வீரர் மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம்?


மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் (sniper) வீரர் சம்பந்தமாக இலங்கை அரசிற்கு அந்நாட்டு அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கான மாலைதீவின் உயர் ஸ்தானிகர் ஸாஹியா ஸரியர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஷ்வரவை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே சம்பவம் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டத்தில் மாலைத்தீவு சென்றதாக கூறப்படும் இலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் வீரர் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டயதாக மாலைதீவு பிரஜை ஒருவர் சில தனங்களுக்கு முன்னர் தெஹிவளையில் கைது செய்ப்பட்டிருந்தார்.