எவன்-கார்ட் சர்ச்சை மற்றொரு விஷேட கூட்டம்


எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த விஷேட கூட்டம் ஒன்று நளை இடம்பெறவுள்ளது.

நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெற இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எவன்-கார்ட் சர்ச்சை தொடர்பாக விஷேட அமைச்சரவை கூட்டம் ஒன்று நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றிருந்தது.

அதன்போது எவன்கார்ட் சம்பந்தமான விசாரணைகளை தேடிப்பார்க்கும் நடவடிக்கையை ஜனாதிபதி பொறுபேற்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இந்த சம்பவத்துடன் தொடர்புபடக்கூடிய பாதுகாப்பு பிரிவு, நீதித்துறை உட்பட அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய விஷேட கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.