கம்பன்பிலவின் மனைவியிடம் 4 மணி நேர விசாரணை


பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் மனைவியிடம் பொலிஸ் தலைமையகத்தின் விஷேட விசாரணைப் பிரிவு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளது.

நேற்றைய தினம் 4 மணிநேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பங்கு மோசடி சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றின் படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்டதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இதுபோன்ற செயற்பாடுகளினால் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாதென்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.