கோத்தபாயவை கைதுசெய்யுங்கள் : ஜே.வி.பி. கோரிக்கை


கடந்த ஆட்சியில் இலங்­கையில் இடம்­பெற்ற அனைத்து கடத்­தல்கள், முக்­கிய நபர்­களின் கொலைகள் மற்றும் பாரிய நிதி ஊழல் மோச­டிகள் அனைத்தின் பின்­ன­ணி­யிலும் உள்ள முக்­கிய குற்­ற­வாளி கோத்­த­பாய ராஜபக் ஷவே­யாவார் என்று மக்கள் விடு­தலை முன்­னணி குற்றம் சாட் டியுள்ளது.

கடந்த காலங்­களில் மூடி மறைக்­கப்­பட்ட மிக­மோ­ச­மான குற்­றச்­சாட்­டு­களை கண்­ட­றிய உட­ன­டி­யாக கோத்­தா­ப­யவை கைது­செய்து சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அக்­கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் நேற்று கொழும்பில் இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே ஜே.வி.பியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலங்­களில் இலங்­கையில் இடம்­பெற்ற முக்­கிய கடத்­தல்கள் மற்றும் லலித் குகன் காணாமல் செய்யப்பட்டமை தொடர்பில் தக­வல்­களை நாம் வழங்­கி­ய­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் 2012ஆம் ஆண்டு குமார் குண­ரத்னம் தங்­கி­யி­ருந்த இடம் உள்­ளிட்ட இர­க­சிய விடயங்கள் தொடர்பில் நாம் தக­வல்­களை வழங்­கி­ய­தாக தெரி­வித்­துள்­ளார். ஆனால் அவ்­வாண்டு குமார் குண­ரத்னம் தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்­சிடம் முழு­மை­யான தக­வல்கள் இருந்­தது. அது தொடர்பில் ஆவணம் எம்­மிடம் உள்­ளது. அதேபோல் நாம் தான் அந்த தக­வல்­களை வழங்­கினோம் என குறிப்­பி­டு­வது உண்­மை­யாயின் ஏன் அதை அப்­போதே தெரி­விக்­க­வில்லை.

அதேபோல் அப்­போது அவர் தொடர்பில் தக­வல்­களை அர­சாங்­கமே வழங்­கி­ய­தற்­கான சாட்­சி­யங்கள் உள்­ளன. அவ்­வாறு இருக்­கையில் நாம் புதி­தாக தக­வல்­களை வழங்­க­வேண்­டிய தேவையும் இல்லை. மேலும் அவர் தொடர்பில் தக­வல்­களை வெளி­யிடும் அள­விற்கு அவர் எம்­முடன் தொடர்புபட்­ட­வரும் இல்லை. ஆனால் அவ்­வாண்டு குமார் குண­ரத்னம் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. அவர் அப்­போ­தைய அர­சாங்­கத்­தினால் கடத்­தப்­பட்டார்.

அதுவும் எந்­த­வித பொலிஸ் தலை­யீடும் இல்­லாது பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்த கோத்­தா­பய ராஜபக் ஷவின் தனிப்­பட்ட தலை­யீட்டின் மூல­மா­கவே இந்த கடத்தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. குமார் குண­ரத்னம் கைது­செய்­யப்­ப­ட­வில்லை. பொலிஸார் அவரை கைது செய்­ய­வில்லை, அவ­ரது வாக்­கு­மூலம் பெறப்­ப­டவும் இல்லை. அவ்­வாறு இருக்­கையில் இது எவ்­வாறு கைதாகும்.

மேலும் அவர் கடத்­தப்­பட்டு சில­ம­ணி­நே­ரங்கள் கடந்து அவர் அனா­த­ர­வாக ஓர்­இ­டத்தில் இறக்கி விடப்­பட்டார். அதன் பின்னர் அவ­ரா­கவே குற்­றப்­பு­ல­னாய்வு பொலிஸ் பிரி­வி­னரை நாடி­யுள்ளார். அவர் அங்கு வரு­கின்றார் என்ற செய்­தியை அறிந்­து­கொண்டு அவுஸ்­தி­ரே­லிய தூதுவர் அவ­ரு­டைய கடவுச் சீட்­டுடன் வந்து அவரை அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு நாடு கடத்­தி­யுள்ளார். இ­துதான் அப்­போது நடந்த உண்­மை­க­ளாகும்.

அதேபோல் கடந்த 2012ஆம் ஆண்டு நாடு­க­டத்­தப்­பட்ட குமார் குண­ரத்னம் மீண்டும் இவ்­வாண்டு ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் நாட்­டிற்கு எவ்­வாறு வந்தார். அவ­ரது கட­வுச்­சீட்டு தடை­செய்­யப்­பட்­டி­ருந்தும் அவ­ருக்கு யார் அனு­மதி வழங்­கி­யது. ஆகவே முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய நபர்­க­ளுடன் அவ­ருக்கு நேரடி தொடர்பு உள்­ளது. அவர்­களின் மூல­மாக தான் அவர் இலங்­கைக்கு வந்­தி­ருக்க வேண்டும். ஆகவே இப்­போது அவ­ருக்கு நல்­ல­தொரு வாய்ப்பு உள்­ளது. தாம் கடத்­தப்­பட்­டமை தொடர்பில் முறை­யான வழக்கு தாக்கல் செய்து குற்­ற­வா­ளி­களை கண்­ட­றிய வேண்டும். அதற்கு இவர்கள் முன்­வர வேண்டும்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய தெரி­வித்­தி­ருக்கும் கருத்தின் அடிப்­ப­டையில் ஒரு முக்­கிய உண்மை வெளி­வந்­துள்­ளது. அதா­வது தான் குண­ரட்­ணத்தை கடத்­தி­யதை அவ­ரது வாக்­கு­மூ­லமே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த சம்­ப­வத்தில் மட்­டு­மல்ல கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியின் போது இலங்­கையில் இடம்­பெற்ற அனைத்து கடத்­தல்­க­ளு­டனும் கோத்­தா­ப­யவே தொடர்­பு­பட்­டுள்ளார். லலித், குகன் உள்­ளிட்ட வடக்கில் இருந்த முக்­கிய நபர்கள், அர­சி­யல்­வா­திகள் , ஊட­க­வி­ய­லா­ளர்கள் கடத்­தப்­பட்­டமை தொடர்­பிலும் தென்­னி­லங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் முக்­கிய வியா­பார நபர்கள் அனை­வரும் கடத்­தப்­பட்ட சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருக்கும் முக்­கிய நபர் கோத்­தா­பய ராஜபக் ஷவே­யாவார்.

கடந்த காலங்­களில் காணா­மல்­போனோர் , கொலை­செய்­யப்­பட்டோர் மற்றும் கடந்த ஆட்­சியில் நடை­பெற்ற பாரிய நிதி ஊழல் மோச­டிகள் அனைத்தின் பின்­ன­ணி­யிலும் உள்ள முக்­கிய குற்­ற­வாளி இவ­ரே­யாவார். ஆகவே உட­ன­டி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷவை கைது­செய்து இந்த உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும். சாதா­ரண குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி அவரை நிர­ப­ரா­தி­யென காட்­டாது கடந்த காலங்­களில் மூடி மறைக்­கப்­பட்ட மிகமோசமான குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்டு அவரை தண்டிக்க வேண்டும்.

ஆகவே இப்போது அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது. இந்த உண்மைகளை கண்டறிந்து கடத்தப்பட்டவர்கள் என்னவானார்கள் எங்கு இருக்கின்றனர் என்ற உண்மையை கண்டறிய உடனடியாக கோத்தாபய ராஜபக் ஷவை கைதுசெய்யப் போகின்றனரா அல்லது ஏதாவது ஒப்பந்தங்களை செய்துகொண்டு அவரை காப்பற்றி நாட்டின் ஜனநாயகத்தை மீண்டும் அழிக்கப் போகின்றனரா என்பதை தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.