சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியிலிருந்து ஶ்ரீனிவாசன் நீக்கம்


ர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து ஶ்ரீனிவாசன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இன்று மும்பையில் இடம்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான திர்மானம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய தலைவரான ஷஷாங் மனோகரால் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் முன்னாள் தலைவரான ஶ்ரீனிவாசன், கடந்த ஜுன் மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக பதவியேற்றார். அடுத்த ஆண்டு ஜுன் மாதம்வரை அவரது பதவிக்காலம் உள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே மீதமுள்ள பதவிக்காலத்தில் ஷஷாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, ஷஷாங் மனோகரால் ஐ.சி.சி., தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க முடியாமல் போனால் அவருக்கு பதிலாக சரத் பவார் கலந்துகொள்வார்.