டைட்டானிக் ‘மெனு’ ஒரு இலட்சத்து 19 ஆயிரம் டொலருக்கு ஏலம்


டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்னர் கடைசியாக அக்கப்பலில் பரிமாறப்பட்ட இரவு விருந்தின் உணவுப் பட்டியல் (மெனு) சுமார் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் டொலருக்கு அமெரிக்காவில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வகுப்பு பயணிகளுக்கு அளிக்கப்பட்ட மெனுவில் ஒய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவு, மாட்டிறைச்சி, வாத்து வறுவல் உள்ளிட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளன.

1912 ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது, அதில் பயணித்தவர்களில் 1500ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

1447078330-581

இதேவேளை, அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னெடி சுட்டுக்கொல்லப்பட்ட காரின் ஜிஜி-300 என்ற லைசென்ஸ் தகடும் இந்த ஏலத்தில் ஒரு இலட்சம் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.

ஜான் எஃப் கென்னெடி 1963 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

1447078360-345