தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது : பிணையில் எவரும் விடுதலையாகவில்லை


நீண்­ட­ கா­ல­மாக தடுத்துவைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி கள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி மீண்டும் உண்­ணா­ வி­ர­தப் ­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­துள்ள நிலையில் அவர்களது போராட்டம் நேற்று இரண்­டா­வது நாளாகவும் தொடர்ந்தது.

அதே­நேரம் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தும் வகையில் தீபா­வ­ளிப் ­பண்­டி­கையை புறக்­க­ணிக்­கு­மாறும் உற­வி­னர்கள் ஊடாக அவர்கள் கோரி­யுள்­ளனர்.

இதே­வளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ள­டங்­கிய குழு­வினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட முக்­கிய அர­சாங்­கத்­த­ரப்­பி­னரை சந்­தித்த போது தீபா­வ­ளிப்­பண்­டி­கைக்கு முன்­ன­தாக முதற்­கட்­ட­மாக 32பேரை பிணையில் விடு­தலை செய்­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­த­போதும் அது தொடர்பில் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் நேற்­றைய தினத்தில் எடுக்­கப்­ப­ட­வில்­லை­யென தெரி­ய­வ­ரு­கின்­றது.

அசா­தா­ரண நிலை­மை­களின் போது அவ­ச­ர­காலச் சட்டம், பயங்­க­ர­வாத தடைச் சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் கைது செய்­யப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக நாட்டின் பல­பா­கங்­க­ளி­லு­முள்ள 14 சிறைச்­சா­லை­களில் 217 தமிழ் அர­சியல் கைதிகள் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் தமது விடு­த­லையை பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பல­த­ரப்­பி­ன­ரிடம் வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­போதும் முறை­யாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்­நி­லையில் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தமது விடு­தலை தொடர்­பாக கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தனர். சிறுவர் தினத்­தன்று தமது பெற்றோர் உள்­ளிட்ட உற­வி­னர்­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி வட­மா­காண முத­ல­மைச்­ச­ரிடம் சிறு­வர்கள் மகஜர் கைய­ளித்­தி­ருந்­தனர்.

அதன் தொடர்ச்­சி­யாக தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி கடந்த மாதம் 12ஆம் திகதி சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை கைதிகள் ஆரம்­பித்­தி­ருந்­தனர். நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்­ன­தாக நிரந்­தர தீர்­வ­ளிக்­கப்­ப­டு­மென ஜனா­தி­ப­தியால் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திக்கு அமை­வா­க 17ஆம் திக­தி­யன்று உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கு­ழு­வி­ன­ருக்கும் ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்­ட­முக்­கி­யஸ்­தர்­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற சந்­திப்­பின்­போது தீபா­வ­ளிப்­பண்­டி­கைக்கு முன்­ன­தாக 32பேரை பிணையில் விடு­தலை செய்­வ­தா­கவும் 20ஆம் திகதி முன்­ன­தாக 30பேரை பிணையில் விடு­தலை செய்­வ­தா­கவும் ஏனை­யோரின் விடு­தலை தொடர்­பாக அமைச்­ச­ரவை குழு நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

குறித்த தீர்­மா­னத்­திற்கு அமை­வாக முதற்­கட்­ட­மாக 32பேரை விடு­தலை செய்­வ­தற்­கு­ரிய எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் நேற்­றைய தினத்தில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்­லை­யென தெரி­ய­வ­ரு­கின்­றது. அதே­நேரம் கைதி­களை விடு­தலை செய்­வ­தாயின் அதற்கு முன்­னைய நாளில் சிறைச்­சா­லை­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்டு அவர்கள் விடு­தலை தொடர்­பான ஒழுங்­கு­முறை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ள­வது வழ­மை­யா­ன­தாகும். ஆனால் நேற்று மாலை­வ­ரையில் அவ்­வா­றான அறி­வித்­தல்கள் எவையும் சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லையில் நேற்யை தினம் இரண்­டா­வது நாளா­கவும் தமது உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்த தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­தலை தொடர்பில் உரிய உறு­தி­மொழி வழங்கப்படும்வரையில் தமது போராட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லையென உறவினர்கள் ஊடாக அறிவித்துள்ளனர்.

அதேவேளை உலகளாவிய ரீதியில் இன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் சந்தப்பத்தில் தமது விடுதலையை வலியுறுத்தும் முகமாக அப்பண்டிகையை புறக்கணிக்குமாறும் உறவினர்கள் ஊடாக அவர்கள் கோரியுள்ளனர். அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் அனைவருக்கும் ஒரே தருணத்தில் விடுதலையளிக்க வேண்டுமென்பதையே தாம் வலியுத்தி நிற்பதாகவும் அவர்களது உறவினர்கள் மேலும் அறிவித்துள்ளனர்.