நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு


நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் 12ம் திகதி மூடப்படும் என்று அரசாங்க ஊடப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அதேநேரம் அன்றைய தினம் கொழும்பில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படும் என்றும் தெரிவித்தார். இதுதவிர ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படும் என்று மேல்மாகாண கல்வியமைச்சர் தெரிவித்தார்.

தரம் 10 மற்றும் 11 மாணவர்களுக்கு தவணை பரீட்சை இடம்பெற இருப்பதனால் அந்த மாணவர்களுக்கு மாத்திர் பாடசாலை விடுமுறை வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவாவே சோபித்த தேரரின் மறைவையொட்டி அன்றைய தினம் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.