மஹிந்­த­வுக்கு பெக்­கர் ­போன்று ரணி­லுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்­துள்ளார் – ஜே.வி.பி


பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கொண்­டு­வந்­துள்ள இடைக்­கால பொரு­ளா­தாரத் திட்­ட­மா­னது நாட்டின் அரச துறையை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தி நாட்டை நாசப்­ப­டுத்தும் ஜே.ஆர். மற்றும் பிரே­ம­தா­சவின் கலப்பு திட்­ட­மா­கு­மென சாடி­யுள்ள ஜே.வி.பி. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­விற்கு ஜேம்ஸ் பெக்கர் கிடைத்­த­தைப்போல் பிர­தமர் ரணி­லுக்கு ஜோர்ஜ் சொரோக் கிடைத்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

சீபா உடன்­ப­டிக்கையை மேற்­கொண்டு நாட்டின் பொரு­ளா­த­ரத்தை முழு­மை­யாக சீர­ழிக்க முயற்­சிக்கும் புதிய ஆட்­சி­யா­ளர்கள் சர்­வ­தேச கறுப்­புப்­பணம் அனைத்­தையும் இலங்­கையில் குவிக்­கவே நட­வ­டிக்­கை­ எடுத்து வரு­வ­தா­கவும் அக்­கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

ஜே.வி.பி.யின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு அக்­கட்­சியின் தலை­மை­ய­க­மான பெல­வத்­தையில் நேற்று நடை­பெற்­றது. இதன் போது கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்;

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்ட இடைக்­கால பொரு­ளா­தார திட்­ட­மா­னது இந் நாட்டின் அரச பொரு­ளா­தாரத் துறையை முழு­மை­யாக சீர­ழிக்கும் ஒரு திட்டம் என்றே நாம் கூறு­கின்றோம். அதேபோல் இந்த திட்­ட­மா­னது ஐக்­கிய தேசியக் கட்­சியின் மூன்றாம் தலை­முறை பொரு­ளா­தார திட்­ட­மா­கவே அமைந்­துள்­ளது. 1977ஆம் ஆண்டு அப்­போ­தைய தலைவர் ஜே.ஆர்.ஜெய­வர்­த்த­ன­வினால் முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார திட்­ட­மா­னது நாட்டின் பொரு­ளா­தாரத் துறை­யையும், நாட்டின் உற்­பத்தி வீதத்­தையும் முழு­மை­யாக சீர­ழித்­தது. அதேபோல் பிரே­ம­தா­ச­வினால் முன்­வைக்­கப்­பட்ட பொரு­ளா­தார திட்­டத்தில் நாட்டின் அர­ச­ சொத்­துக்கள் அனைத்தும் தமது தேவைக்­கா­கவும் வேண்­டப்­பட்ட நபர்­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்­துள்ள இடைக்­கால பொரு­ளா­தாரத் திட்­ட­மா­னது மேற்­கு­றித்த இரண்டு தலை­வர்­களின் பொரு­ளா­தாரத் திட்­டங்­க­ளி­னது கல­வை­யா­கவே உள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இடைக்­கால பொரு­ளா­தார திட்­ட­மா­னது நாட்டின் அரச துறையை முழு­மை­யாக ஒன்­றி­ணைத்து அவற்றை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தும் வகையில் அமைந்­துள்­ளது. அரச சேவை­களை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தும் பாரிய வேலைத்­திட்­டத்தை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது. இதனால் நாட்டில் பாரிய பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­படுவதற்கான வாய்ப்­பு­க்களே அதி­க­ரிக்கும் ஆபத்து உள்­ளது. நாட்டின் அரச துறை­யையும் அத­னுடன் கூடிய பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளையும் தனியார் மயப்­ப­டுத்த முயற்­சித்த கால­கட்­டத்தில் எமது ஏற்­று­மதி வீதம் பாரிய வீழ்ச்­சியை கண்­டது. உலகச் சந்­தையில் 200 இல் ஒரு சத­வீ­த­மாக இருந்த இலங்­கையின் பங்­குகள் இப்­போது 2000 இல் ஒரு சத­வீ­த­மாக மாறி­யுள்­ளன. இதற்கு எமது பொரு­ளா­தார நகர்­வு­களே பிர­தான கார­ண­மா­கின்­றது. ஆகவே அர­சாங்கம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை முழு­மை­யாக தனியார் மயப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டால் சர்­வ­தேச வர்த்­தகச் சந்­தை­யிலும், பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளிலும் எமது நாடு பாரிய பின்­ன­டை­வையே எதிர்­கொள்ள நேரிடும்.

சீபா உடன்­ப­டிக்கை
இலங்கை அர­சாங்கம் மீண்டும் சீபா உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன. இந்த சீபா உடன்­ப­டிக்கை தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்­பட்ட சிக்­கல்கள் தொடர்பில் அறிந்தும் மீண்டும் அவ்­வா­றான ஒரு பொரு­ளா­தார சிக்­கலை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. 2000 ஆம் ஆண்டு இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் இந்த உடன்­ப­டிக்­கையை செய்­து­கொண்ட பின்னர் இலங்­கையின் தேசிய பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் பாரிய தாக்கம் ஏற்­பட்­டது. எமது தேசிய பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் இந்­தி­யாவின் நேரடித் தலை­யீ­டுகள் ஏற்­பட ஆரம்­பித்­தது. அதனால் எமது நாட்டின் சாதா­ரண வியா­பா­ரி­களும் விவ­சா­யி­க­ளுமே அதி­க­மாக பாதிக்­கப்­பட்­டனர். அதே நிலைமை மீண்டும் இப்­போது தலை­தூ­க்கி­யுள்­ளது. ஆகவே இந்த சீபா உடன்­ப­டிக்­கையை உட­ன­டி­யாக தடை செய்ய வேண்டும்.

ரணி­லுக்கு ஜோர்ஜ் சொரோக்
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தமது பொரு­ளா­தார நண்­ப­னாக எவ்­வாறு சர்­வ­தேச சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்­கரை பயன்­ப­டுத்தி இலங்­கையில் தேசிய வியா­பார நட­வ­டிக்­கை­களின் ஊடாக நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சூறை­யாட முயற்­சித்­த­ாரோ அதேபோல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­பொ­ழுது சர்­வ­தேச ரீதியில் சட்­ட­வி­ரோத முறையில் செயற்­படும் வியா­பா­ரி­யான ஜோர்ஜ் சொரோக் என்­ப­வரை இலங்­கைக்கு அழைத்­து­வர திட்­ட­மிட்­டுள்ளார்.

இவர் மேற்­கத்­தேய நாடு­களில் மட்­டு­மல்­லாது ஆசிய–பசுபிக் நாடு­களில் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டவர். அந்­நா­டு­களின் பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கு முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யா­கவும் விமர்­சிக்­கப்­படும் ஒரு­வ­ராவார். அவ்­வா­றா­ன­வரை இலங்­கையின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களில் இணைத்­துக்­கொண்டு சர்­வ­தேச ரீதியில் பாவ­னையில் இருக்கும் அனைத்து கறுப்­புப்­ப­ணத்­தையும் நாட்­டுக்குள் கொண்­டு­வந்து குவிக்கவே முயற்சிக்கின்றார் இதற்கு இடமளிக்கமாட்டோம்.