யால சாரணாலய பதையில் செல்லும் வாகனங்களின் வேகத்தில் கட்டுப்பாடு


யால விலங்குகள் சரணாலயத்திற்கு உட்பிரவேசிக்கும் பாதையில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்வுள்ளது.

வன விலங்குகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
பலட்டுபான மற்றும் கிரிந்த சந்திக்கு அருகில் உள்ள பாதையில் வாகனங்கள் வேகமாக செல்வதானால் விலங்குகள் இறக்க நேரிடுவதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் எச்.டீ. ரத்நாயக்க தெரிவித்தார்.

யால விலங்குகள் சரணாலயத்திற்கு உட்பிரவேசிக்கும் பாதையில் தற்போது காணப்படும் வேக எல்லையான மணித்தியாலத்திற்கு 25 கி.மீ. என்ற வேக எல்லையை, சரணாலயத்தை அண்மித்த ஏனைய பாதைகளுக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எச்.டீ. ரத்நாயக்க தெரிவித்தார்.