விக்கினேஸ்வரனை நீக்கும் திட்டமில்லை


வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக் குவது தொடர்பில் முடிவெதுவும் எடு க்கப்படவில்லை. அவ்வாறு யாராவது கூறி யிருந்தால் அது தவறாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரி வித்துள்ளார்.முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை கட்சியலிருந்து நீக்குமாறு தான் கோரி யுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவுஸ்திரேலியாவில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து கேட்டபோதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,
கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடை பெற்றபோது முதலமைச்சர் கூறிய சில கூற்றுக்கள் மற்றும் அவரின் சில நட வடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை.
அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக் கின்றோம். எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு. முதல மைச்சருக்கும் எமக்குமிடையில் விரைவில் பேச்சுவார்த்தை இடம்பெறும்.