கண்­ணா­டி­யா­லான அடித்­த­ளத்தை கொண்ட தொங்கு பாலத்தில் யோகா­சனம்


சீனாவைச் சேர்ந்த 100 யோகா­சனக் கலை­ஞர்கள் 590 அடி உய­ரத்தில் அமைந்­துள்ள கண்­ணா­டி­யா­லான அடித் தளத்தைக் கொண்ட அச்­ச­மூட்டும் தொங்கு பாலத்தில் யோகா­சனப் பயிற்­சி­களில் ஈடு­பட்டு புதுமை படைத்­துள்­ளனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த யோகா­சன நிகழ்வு குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
ஹுனான் மாகா­ணத்தில் யுயயாங் நக­ரி­லுள்ள ஷினி­யு­ஸாயி தேசிய புவி­யியல் பூங்­கா­வி­லுள்ள பாலத்தில் நின்­ற­வாறு மேற்­படி யோகா­சன கலை­ஞர்கள் இவ்­வாறு யோகா­சன பயிற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

சீனாவின் ஹெனான் மாகா­ணத்தில் யுன்­தாயி மலைப் பகு­தியில் 3,540 அடி உய­ரத்தில் அந்­த­ரத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணா­டி­யா­லான அடித்­த­ளத்தைக் கொண்ட நடை­பா­தையில் வெடிப்பு ஏற்­பட்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த சம்­பவம் இடம்­பெற்று சரி­யாக ஒரு மாதத்தில் இந்த துணி­கர யோகா­சன நிகழ்வு இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த யோகா­சன பயிற்­சியின் போது தாம் உறு­தி­யான தரை மேற்­ப­ரப்பில் நின்று யோகா­ச­னங்­களை செய்வது போன்று கற்பனை செய்தவாறு பயிற்சிகளில் ஈடுபட்டதாக இந்தப் பயிற்சிகளில் பங் கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.