குடும்ப சுகாதார அதிகாரிகள் 1800 பேரை புதிதாக இணைக்க திட்டம்


அடுத்த வருடம் குடும்ப சுகாதார அதிகாரிகள் 1800 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கிடைக்கப் பெற்ற 11601 விண்ணப்பங்களில் 2900 விண்ப்பங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக அடுத்த வருட ஆரம்ப பகுதியில் 1200 பேரும், நடுப்பகுதியில் 600 பேரும் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த தினங்களில் இடம்பெற்றுள்ளதுடன், சுகாதார அமைச்சரினால் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Advertisements