நயினா தீவு என்ற பெயரில் ஏற்பட்ட சிக்கல்


ஆங்கிலத்தில் நாகதீபய என்ற பெயரை நயினா தீவு என மாற்றும் யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இவ்வாறான தீர்மானம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.