புதிய அமைச்சர்கள் இருவரும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்


தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், புனர்வாழ்வு, மீள்குடியமர்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

திலக் மாரப்பன, சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து வந்த வெற்றிடத்திற்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.