பேஸ்புக்கில் இணைந்தார் ஒபாமா


சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் கடந்த மே மாதம் இணைந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,  தற்போது பேஸ்புக் சமூக இணையத்தளத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார். தனது இரண்டாவது ஆட்சி காலத்தின் இறுதிக் கட்டத்தில் பதவி வகித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கடந்த திங்கட்கிழமை இணைந்தார்.

பேஸ்புக்கில் இணைந்த சிறிது நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பக்கத்தை 2 இலட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.  அது தற்போது  9 இலட்சத்தை தாண்டியுள்ளது.

இதேவேளை, தனது முதல் பேஸ்புக் பதிவில், ஹலோ பேஸ்புக்! எனவும்  நம் நாடு சந்திக்கும் மோசமான பிரச்சினைகள் குறித்து நாம் நேரடியாக விவாதிக்கலாம் என்று நம்புகிறேன் என ஒரு பதிவு செய்துள்ளதுடன் பருவ நிலை மாற்றத்திற்கான ஒரு காணொளியையும் ஒபாமா தரவேற்றியுள்ளார்.