முதன்முறையாக 28.5 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன வைரக்கல்


வைரங்களில் மிக அரிதாக கிடைக்கும் 16.08 கேரட் மதிப்புள்ள மாசற்ற பிங்க் நிற வைரக்கல் ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தினால் 28.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது.

சுற்றி வெள்ளை நிறத்திலான சிறிய வைரக்கற்கள் பொறிக்கப்பட்ட மோதிரத்தின் நடுவே, வெளிர்சிவப்பு நிறத்தில் உள்ள இந்த வைரக்கல், 23 முதல் 28 மில்லியன் டாலர்கள் வரை ஏலம் போகும் என இந்நிறுவனம் முன்னர் எதிர்பார்த்தது.

ஆனால், நேற்றைய ஏலத்தின்போது கடும்போட்டிக்கு இடையே ஹாங்காங் நகரில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத சீன நாட்டைச் சேர்ந்த ஒருவர், மிகவும் அரிதான இந்த வைர மோதிரத்தை 28.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.