வங்கியில் கொள்ளை முயற்சி; கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி


கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடுவதற்காக வந்த கொள்ளைக்காரன் தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்க செய்ததால் கொள்ளையிட வந்த கொள்ளைக்காரனும் வங்கியின் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்துள்ளனர்.

வங்கிக்கு வந்த குறித்த கொள்ளைக்காரன் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வங்கியின் பாதுகாப்பு ஊழியர் அவரை வெளியில் அழைத்து செல்ல முற்பட்டவேளை கைக்குண்டை வெடிக்க செய்துள்ளான்.

இன்று பிற்பகல்1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.