4 கோடிக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முற்பட்ட இருவர் கைது


சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் தமது இடுப்புப்பட்டியில் மறைத்து வைத்து வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்டதாக விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடம் இருந்து 229,500 அமெரிக்க டொலர்களும், 50,000 யூரோக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை ரூபாய்படி இவற்றின் பெறுமதி 4 கோடியே 7 இலட்சத்து 52,736 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த 30 வயது மற்றும் 45 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடம் சுங்கப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.