மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


மன்னார் மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜீ.அலெக்ராஜா ஒத்திவைத்துள்ளார்.

மன்னாரிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.