மவிமுவுக்கு எதிராக ரோஹன விஜயவீரவின் மனைவி வழக்கு


மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவுனர் ரோஹன விஜயவீரவால் எழுதப்பட்ட ஏழு புத்தகங்களை அச்சிடல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகிக்கின்றமையை தடுக்குமாறு கோரி கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில், வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஜயவீரவின் மனைவி ஶ்ரீமதி சித்ராங்கனி பிரணாந்துவால் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரான ரோஹன விஜயவீரவால் எழுதப்பட்ட படைப்புகளுக்கான பதிப்புரிமை தன்வசம் உள்ளதாகவும், இந்தநிலையில் அதனை மக்கள் விடுதலை முன்னணி அச்சிடுதல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தல் என்பனவால் தனது அறிவுசார் சொத்துரிமை மீறப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த மனுவை எதிர்வரும் 27ம் திகதி விசாரிக்க கொழும்பு வர்த்தக நீதிமன்றம் தீர்மானித்துள்ளதோடு அன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.