இறுதியானதும் விசாலமானதுமான நீர் மின்சார திட்டம்


இலங்கையின் இறுதியானதும் விசாலமானதுமான நீர் மின்சார திட்டம் ஒன்று தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட இருப்பதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் சீதாவக நதியை மூலமாகக் கொண்டு இந்த வேலைத் திட்டம் ஸ்தாபிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இன்று காலை குறித்த மின்சார திட்டம் அமைக்கப்பட உள்ள இடத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பிரதேசத்திற்குறிய அடிப்படை வசதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.