எவன்கார்ட் ஆயுதங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை கடற்படையினரால் ஆரம்பம்


எவன்கார்ட் மெரிடைம்ஸ் பாதுகாப்பு நிறுவனத்திடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் கடற்படையினரால் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. மஹ நுவர, எவன்கார்ட் ஆகிய பெயர்களைக் கொன்ட எவன்கார்ட் நிறுவனக் கப்பல்களில் காணப்பட்ட ஆயுதங்களையே இவ்வாறு தாம் பொறுப்பேற்பதாகவும் குறித்த நடவடிக்கைகள் முற்றுப் பெற சுமார் 5 நாட்கள் வரைச் செல்லும் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அளவி தெரிவித்தார்.

எவன்கார்ட் மெரிடைம்ஸ் நிறுவனத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான அனைத்து ஒப்பந்தங்களையும் இரத்து செய்து, குறித்த நிறுவனம் முன்னெடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் கடற்படையின் கீழ் கொண்டுவர ஜனதிபதி மைதிரிபால சிறிசேன  உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று அந் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அதன்படி எவன்கார்ட் நிறுவனம் வாடகைக்கு அமர்த்திய இவ்வருடம் ஆரம்பத்தில் கைப்பற்றப்பட்ட மஹ நுவ என்ற கப்பலில் உள்ள ஆயுதங்களை சரிபார்த்து பொறுப்பேற்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. குறித்த கப்பலில் இருந்த சுமார் 14 வரையிலான ஆயுத கொள்கலன்கள் சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால்  திறக்கப்பட்டது. பின்னர் புலனாய்வுப் பிரிcவின் அதிகாரிகள் முன்னிலையில் ஆயுதங்களை சரிபார்த்து பொருப்பேற்கும் பணி ஆரம்பமானது. மஹ நுவர என்ற இந்த கப்பலில் உள்ள ஆயுதங்களைப் பொருப்பேற்ற பின்னர் எவன்கார்ட் என்ற பெயர் கொன்ட ல்கடந்த மாதம் கைதுச் எய்யப்பட்ட காப்பலில் உள்ள 816 ஆயுதங்களும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்படவுள்ளது.

எவன்கார்ட் சர்ச்சை தொடர்பில் கடந்த புதனன்று  மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விஷேட  கலந்துரையாடலின் பின்னர் எவன்கார்ட் நிருவனம் முன்னெடுத்த கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையை கடற்படையிடம் ஒப்படைப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த ஒன்பதான் திகதி இடம்பெற்ற விஷேட அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட விஷேட முடிவின் அடிப்படையில், எவன்கார்ட் நிறுவன விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இணைந்து நடத்திய  விஷேட கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

 நேற்று மாலை ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான விஜேதாஸ ராஜபக்ஷ, பாட்டாலி சம்பிக்க ரணவக, ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாதுகாப்பு செயலாளர் ஹெட்டி ஆரச்சி,  ஆகியோருடன் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், கடற்படை தளபதி ரவீந்ர சீ விஜே குணவரத்ன, சட்ட மா அதிபர் யுவஞ்சன வணசுந்தர, ரக்ன லங்கா நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந் நிலையிலேயே ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய நேற்று ஆயுதங்களைப் பொருப்பேற்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.