எவன்கார்ட் சர்ச்சை; தேசிய அரசாங்கம் தொடர்பில் சந்தேகமாம்


தற்போதைய நிலையில் தேசிய அரசாங்கம் தொடர்ந்து செயல்பாடுமா என்ற சந்தேகம் தனக்கு எழுந்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
எவன் கார்ட் சம்பந்தமாக ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் வழங்கும் விதமாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இவ்வாறு தெரிவிக்கின்றார்.

எவன் கார்ட் சம்பந்தமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவ்வாறு கைது செய்வதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக தான் கூறியதனால் தன்மீது விமர்சிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்கார்ட் நிறுவனத்திற்கு சார்பாக நான் முன்னின்று கதைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements