சீனி பயன்பாட்டில் கட்டுப்பாடு: விசேட திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசம்


நீரிழிவு நோயைத் தடுக்கும் நோக்கில் சீனி பயன்பாட்டைக் குறைப்பதற்கு, அரசாங்கத்தினால் இன்றிலிருந்து விசேட திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதுகுறித்த சுற்றுநிரூபத்தை இன்று உலக நீரிழிவு நோயை முன்னிட்டு வெளியிட்டு வைக்கும் நிகழ்வு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

அரச நிறுவனங்களில் இடம்பெறும் செயலமர்வுகள் மற்றும் கூட்டங்களில் வழங்கப்படும் சிற்றுண்டிகளின் போது சீனி தனியாக வழங்கப்பட வேண்டும் என இந்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனி பயன்பாட்டைக் குறைத்து நீரிழிவு நோயைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் கண்காட்சியொன்றும் இடம்பெற்றது.

பாடசாலைகளின் உணவகங்களில் உப்பு , சீனி மற்றும் எண்ணெய் கூடிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

12219396_10153641868376327_3573796158344635519_n

12241254_10153641868096327_2213354025515924267_n

11041517_10153641867846327_683422650080493002_n