செல்பி கையை உருவாக்கிய வினோத விஞ்ஞானி


‘செல்பி’ புகைப்படங்களை எளியமுறையில் எடுக்க உலகம் முழுவதும் பலராலும் பயன்படுத்தப்பட்டுவரும் ‘செல்பி’ குச்சியை பொது இடங்களில் உபயோகிக்க சங்கடமாக இருந்த நிலையில் ஒரு ஜப்பானிய விஞ்ஞானி உடனடியாக ஒரு ‘செல்பி’ கையை வடிவமைத்துள்ளார்.

முதலில், தனது மனதில் இருந்த கற்பனையான எண்ணத்துக்கு வடிவம் கொடுத்த அவர், அமேசான் இணையதளத்தில், செயற்கை கைகள் இரண்டை வாங்கியுள்ளார்.

அந்த செயற்கை கைகள் இரண்டையும் ஒவ்வொரு ‘செல்பி’ குச்சியுடன் இணைத்துவிட்டார்.

இதன் உள்ளங்கைக்குள் மொபைல் போனைப் பிடித்துக்கொள்வதற்கு ஏற்ப ஹோல்டர்களையும் பொருத்தினார்.
தற்போது இந்த செயற்கை கையை உபயோகிப்பதற்காக மிக நீண்ட கைகளைக் கொண்ட சட்டையையும் தயார் செய்து தனது ‘செல்பி’ கையை பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்.

ad_187793120

ad_187793115

ad_187793112

sleeves

ad_187793116

ad_187793117

ad_187793118