ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை


ஜப்பானின் தென் மேற்கு கடற்பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தெற்கு ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் அலைகள் ஒரு மீட்டர் அளவுக்கு உயரமாக இருக்கும் எனவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, க்யூஷூ தீவிலுள்ள கஹோஷிமா கடற்கரை பகுதியை ஒரு மீட்டர் உயரமுள்ள அலைகள் தாக்கக் கூடும் என ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தீவுக்கு அருகாமையில் கடற்கரைக்கு அப்பாலலுள்ள வேறு சில தீவுகளையும் உயரமான அலைகள் தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான நில நடுக்கம் ஏழு புள்ளிகள் அளவுக்கு வலுவானதான இருந்துள்ளது.