பாடசாலை சீருடைகளுக்குப் பதிலாக மாணவர்களுக்கு பண வவுச்சர்களை வழங்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு


பாடசாலை சீருடைகளுக்குப் பதிலாக மாணவர்களுக்கு பண வவுச்சர்களை வழங்குவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளமைக்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மூலம் சீருடை வழங்கும் செயற்பாட்டை முற்றாக செயலிழக்கச்செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதா, என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் பிரதம செயலாளர் குறிப்பிடுகின்றார்.

பண வவுச்சர்களைக் கொண்டு சீருடைக்குப் பதிலாக​ வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழியேற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சீருடை வழங்குவதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், அதற்குப் பதிலாக இலவச கல்விக்கான வசதிகளை இல்லாதொழிக்க முற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.