மக்களின் உண்மையான முன்னேற்றம் தொழில்நுட்ப முன்னேற்றம் அல்ல – ஜனாதிபதி


மக்களின் உண்மையான முன்னேற்றம் தொழில்நுட்ப ரீதியாக ஏற்படும் முன்னேற்றம் அல்ல எனவும் உடல் மற்றும் உள ரீதியாக ஆரோக்கியமான நிலையே உண்மையான முன்னேற்றம் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இன்று உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்திலிருந்து பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் வரையான நடைபயணம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.