அமானா கிட்ஸ் கொலேஜின் 2015 பாலர் கலை விழா


– பழுலுல்லாஹ் பர்ஹான் –
மட்டக்களப்பு-காத்தான்குடி அமானா கிட்ஸ் கொலேஜின் 2015 பாலர் கலை விழா 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அமானா கிட்ஸ் கொலேஜின் தலைவர் ஆசிரியர் எஸ்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இப் பாலர் கலை விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் பீ.எம்.அன்சார் (நளீமி) கலந்து கொண்டார்.
இங்கு அமானா கிட்ஸ் கொலேஜ் பாலர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது அதிதிகளினால் பாலர் கலை விழாவில் பங்குபற்றிய சிறுவர்,சிறுமிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சமூக தொண்டர் சேவை பணிகளில் பாலர்களின் தோழன்; எம்.எச்.எம்.முழாபிர் (லக்கி) ஈடுபட்டார்.
இப் பாலர் கலை நிகழ்வில் அம்பாறை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் பீ.எம்.அன்சார் (நளீமி),இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் ஏ.எல்.எம்.மாஹிர் ,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.சீ.அப்துல் அஸீஸ்,அல் ஸபா பீ,எல்.சீ. கிளை முகாமையாளர் றிஸ்வான் நிஸாமுதீன், அமானா கிட்ஸ் கொலேஜின் பணிப்பாளர் எம்.ஐ.எம்.அன்வர்,ஆசிரியர் அப்துல் அஸீஸ்,சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் (ஜேபி), பெண்களுக்கும் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திற்குமான அமைப்பின் தலைவியும் ,முன்னாள் நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சா,பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.மக்பூழ், அமானா கிட்ஸ் கொலேஜின் அதிபர் காமிலா அன்வர் உட்பட ஊர் பிரமுகர்கள் கல்வியலாளர்கள்,புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

Advertisements