ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லிம்கள் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் அரக்கர்கள் படையாகும்- மசூர் மௌலானா


– எம்.வை.அமீர் –

அண்மையில் பிரான்ஸின் பரிஸ் நகரத்தில் இடம்பெற்ற ஐ.எஸ். அமைப்பின் மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கீழ் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, அரபிகளையும் அஜமிகளையும் பிரித்து, இஸ்லாமிய வல்லரசுகளை சுக்கு நூறாக உடைக்கும்சூழ்ச்சிக்காரர்களின் வக்கிர எண்ணத்தின் மறு வடிவமே இஸ்லாத்தின் பெயரால்கொடூர வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் ஐ.எஸ். எனும் அரக்கர்கள் படையாகும் என்பதில் மாற்றுக் கருத்தும்- துளி சந்தேகமும் இருக்க முடியாது.

அண்மையில் பிரான்ஸின் பரிஸ் நகரத்தில் இடம்பெற்ற ஐ.எஸ். அமைப்பின் மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் உலக நாடுகளில் முஸ்லிம்களின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கான முஸ்லிம் எதிர்ப்பாளர்களின் உக்கிரமான உத்திகளில் ஒன்றாகும்.

இன்று முஸ்லிம் நாடுகளில் பரவியிருக்கும் மேற்கத்தேய ஆதிக்கத்தின் முதல் பலிக்கடா ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் ஆகும். சதாம் ஹுசைனில் தொடங்கி லிபியாவின் அதிபர் கடாபி வரை பழி வாங்கப்பட்டது இதற்காகத்தான்.

எண்ணெய் வளமும் செல்வமும் மேலோங்கி இருந்த மத்திய கிழக்கு நாடுகளில் யூத அரக்கர்களின் அயராத சூழ்ச்சி வலைகளினால் மக்களிடையே கிளர்ச்சிகளைஏற்படுத்தி முஸ்லிம் தேசங்களை சின்னாபின்னமாக்கும் கோர முகங்களின் முகமூடிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் வெகு விரைவில் கிழித்தெறிந்து விடுவான்.

ஐ.எஸ். எனும் அமைப்பு முஸ்லிம் பெயர் தாங்கிய காபிர்களின் காட்டுமிராண்டித்தனமான உருவாக்கமாகும். இந்த உருவாக்கத்தை தமக்கு சாதகமாக்கி ஷீஆக்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத யதார்த்தமாக இருக்கிறது.

பலஸ்தீன்,ஈராக்,லிபியா,எகிப்து,சிரியா,யெமென்,பஹ்ரைன்,லெபனான் என அழகும் வளமும் நிறைந்து காணப்பட்ட முஸ்லிம் ஆதிக்க தேசங்களின் இறைமையை சீர் குலைத்து, இலட்சக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்ததன் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாத ரகசியமல்ல.

முஸ்லிம் எதிர்ப்பாளர்களான ஷீஆக்களும்,யூதர்களுமே இன்றைய ஒட்டுமொத்தபிரச்சினைகளுக்கும் முக்கிய சூத்திரதாரிகளாகும். அவர்களின் கொடூரமான மறைகரங்களே இன்று சர்வதேசங்களில் முஸ்லிம்களின் மீது கறை பூச காரணமாகஅமைகிறது. இதனைத் தடுக்க உண்மை முஸ்லிம்கள் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்.

முஸ்லிம் உம்மாவின் நிம்மதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிற இஸ்லாமிய விரோத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். எதிரிகள் பலம் பொருந்திய முஸ்லிம் நாடுகளை அழித்தொழித்தது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களின் ஆளுமை மிக்க ஆட்சியாளர்கள்,அறிஞர்கள்,மாமேதைகள்,நிபுணர்களையும் தேடித் தேடி கொன்றொழித்து வருகின்றனர். நாம் அனைவரும் ஒரு கிப்லாவை முன்னோக்கி தொழும் அஹ்லூல் சுன்னாக்கள்ஆகும். அப்படியிருக்கையில் நாம்  பிரிந்து சூபித்துவம் என்றும், ஸலபியென்றும், வஹாபியென்றும், சுன்னத்துவல் ஜமாத் என்றும் இயங்கி வருவது முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு மென்மேலும் தூபமிடுகிறது. இன்றுபிரிவுகளுக்குள்ளும் நூறு பிரிவுகள் உருவாகி விட்டன. முஸ்லிம்களாகிய நாம்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் குர் ஆன்,ஹதீஸ் சொல்லும்பாதையில் செல்ல வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவையாகும்.

முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் காலத்திற்கு காலம் இஸ்லாத்தின் பெயரால் தீவிரவாதஇயக்கங்களை நன்கு திட்டமிட்டு கட்டமைத்து, போஷித்து, பயிறசியளித்து-அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அவ்வப்போது தாக்குதல்களை நடாத்தி உலக நாடுகளில் அனுதாபம் தேட முடியாத ஒரு சமூகமாக முஸ்லிம்களை சித்தரிப்பதன் மூலமாக இஸ்லாத்தின் மீதான தமது வஞ்சத்தை தீர்த்து வருகின்றனர்.

இருந்த போதிலும், சூழ்ச்சிக்காரனுகெல்லாம் மிகப் பெரிய சூழ்ச்சிக்காரன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹுத்தாஆலா தான் என்பதை இந்த ஈனர்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. முஸ்லிம்கள் மீதான அனைத்து அபகீர்த்திகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிரான அல்லாஹ்வின் நீதி என்றாவது வந்து சேருமென்பதில் சந்தேகமில்லை.

எல்லாம் வல்ல நாயன் எங்கள் அனைவரையும் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்க வேண்டுமென இருகரமேந்தி பிரார்த்திப்போம்.